சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 906ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் – 3, ராமநாதபுரம் – 3, பெரம்பலூர் – 2 பேருக்கும், கடலூர், சேலம், திருவள்லூர், அரியலூர் ராணிப்பேட்டையில் தலா ஒருவருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1,10,718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இன்று மட்டும் 9,643 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தற்போது 1035 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1258ஆக அதிகரித்துள்ளது.