குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். மத்திய மாநில அரசு கொரோனவை கட்டுப்படுத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ள நிலையில் 353 பேர் குணமடைந்துள்ள நிலையில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 70க்கும் அதிகமானோர் குணமடைந்து 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் 165 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 25 பேர் குணமடைந்து 13 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அங்குள்ள ஜாம்நகர் பகுதியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 14 மாத குழந்தை உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
Gujarat: A 14-month-old #COVID19 positive child passed away in Jamnagar, today. More details awaited.
— ANI (@ANI) April 7, 2020