தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருந்து வந்த 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 1,423 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,146, செங்கல்பட்டு – 95, திருவள்ளூர் – 80, காஞ்சிபுரம் – 16, தூத்துக்குடி – 14 பேர் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 874 பேர் ஆண்கள், 584 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 18,689 ஆண்களும், 11,446 பெண்களும், 16 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.