தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 1,024 பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 96 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தை பொறுத்த வரை 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்து 5 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினருடன் முதலவர் ஆலோசனை நடத்தினார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது.