Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 526 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 6535ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் மாலை நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரம் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்படும். அந்தவகையில் இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் தமிழகத்தில் இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 6535ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 279 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3330ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |