Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 1,162ஆக உயர்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1094பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 583 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 499 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதித்த 11 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மேலும் 68 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,162 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு அருகில் இருக்கும் புறநகர் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமும் 400க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது. கொரோனா உறுதி செய்யப்படுபவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் திரும்பிய வண்ணம் இருப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஏற்கனவே, கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடபட கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனையடுத்து செங்கல்பட்டில் சமூக பரவல் ஏற்படாமல் தடுக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Categories

Tech |