செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி. அரசுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவர், கடந்த 10ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, கடந்த 21ம் தேதி ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூன்றாவதாக மேலும் ஒரு திமுக எல்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த 16ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது வரை தமிழகத்தில் 4 எம்எல்ஏகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் ஒருவர் மரணமடைந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.