சீனாவில் சுமார் 70 கொரானா நோயாளிகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தி வைத்திருந்த ஹோட்டல் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் கிழக்கு புஜியான் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கொரானா நோயாளிகளிடம் தொடர்பு கொண்டிருந்த நபர்களை தனிமைப்படுத்தி கொரானா தோற்று உள்ளதா என கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணி அளவில் ஹோட்டல் இடிந்து விழுந்தது. இந்த ஹோட்டலில் 70 பேர் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
#BREAKING: A hotel building collapsed in Quanzhou, SE China's Fujian at around 7 pm Saturday, trapping an unknown number of people under it. So far 16 people have been rescued. Rescue work remains underway. pic.twitter.com/rK7tEagQvV
— People's Daily, China (@PDChina) March 7, 2020