உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியிருக்கிறது. மேலும் அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை தடுக்க கொரோனா நிவாரணமாக மாநில அரசுக்கு பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநில முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 கோடியை ராமோஜி குழுமத்தின் நிறுவனத் தலைவர் ராமோஜி ராவ் நேற்று வழங்கினார். இந்த நிவாரண நிதிக்கான தொகை ஆன்லைனில் அந்தந்த மாநில முதல்வரின் பொது நிவாரண வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராமோஜி ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக, இரு மாநில முதல்வர்களையும் தனிப்பட்ட முறையில் என்னால் சந்திக்க முடியவில்லை. உலகை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்றான கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இரு மாநில முதலமைச்சர்களையும் நான் பாராட்டுகிறேன்” என்றார்.