Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மது பானங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிப்பு!

புதுச்சேரியில் மது பானங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை. ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் ஊடங்கு தளர்வுகளுக்கு இடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. துச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி விதிக்கப்படும் என்றும் புதுச்சேரியில் விற்கப்படும் சாராயத்திற்கு 20% கொரோனா வரி விதித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.40க்கு விற்ற குவாட்டர் தற்போது ரூ.120க்கு விற்பனை, ரூ. 113க்கு விற்ற பீர் விலை ரூ.240க்கு விற்பனை, ரூ. 145க்கு விற்ற வெளிநாட்டு பீர் தற்போது ரூ.508க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மதுபான விலை உயர்வை தொடர்ந்து புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீது 5.75 சதவீதமும், டீசலுக்கு 3.65 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |