Categories
மாநில செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகனுக்கு கொரோனா சோதனை – உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகனுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து விதி முறைகளை மீறி கடை நடத்தி வந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு, போலீசார் அடித்து கொன்றதாக ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

எனவே உயிரிழந்த இருவரின் உடல்களை வாங்க உறவினர் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் பிரேத பரிசோதனை மையத்திற்கு கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் வந்து மருத்துவ கல்லூரி முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார்.

Categories

Tech |