Categories
மாநில செய்திகள்

1,093 பேரிடம் கொரோனா சோதனை… தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரம் – அமைச்சர் விஜயபாஸ்பாஸ்கர்!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகையானது 500ஐ தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் தமிழகத்தில் 1,093 பேரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் 933 பேருக்கு கொரோனா இல்லை. 26 பேருக்கு பாதிப்பு உள்ளது. ஒருவர் குணமடைந்துள்ளார். 80 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கொரோனா தனி வார்டுகளில் 13,727 படுக்கைகள் உள்ளன.

அதில் 284 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2,09,284 பயணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழகத்தில் மொத்தம் 2,464 வெண்டிலேட்டர் உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை என ரத்த பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதனால் 2 நாட்கள் கண்காணிப்பிற்கு பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |