Categories
Uncategorized மாநில செய்திகள்

நெல்லை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழப்பு!

நெல்லை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

இதனால் நெல்லையில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 507 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 379 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் பாதித்த ஒருவர் உயிரிந்துள்ளார். தற்போது ஒரு மூதாட்டி பலியாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆக உள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 26,782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 528 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் 13 பேர் மற்றும் நெல்லையில் ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 542ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |