Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் உடனடி ஆம்புலன்ஸ் சேவையை பெற புதிய எண் அறிவிப்பு: சுகாதாரத்துறை!

சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044-40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அவசர எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இன்றி பெறலாம் என கூறியுள்ளார். மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்பை கையாள எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அவரச அழைப்புக்கு என ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வகையில் இந்த சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. குறிப்பாக சென்னை அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீட்டில் வசிப்பவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டால், உடனடியாக அவ்விடத்திற்கு ஆம்புலன்ஸ் சேவை வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவர் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |