Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பு: பாகிஸ்தானில் லாக்டவுனுக்கு வாய்ப்பில்லை… கைவிரித்த இம்ரான் கான்.!

கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அந்நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.

இதை  கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. பாகிஸ்தானிலும் வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டில் லாக் டவுன் என்ற முழுமுடக்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது.

லாக் டவுன் என்ற முழுமுடக்க நடவடிக்கையை  அரசு மேற்கொண்டால் பொருளாதார சிக்கல் ஏற்படும். பாகிஸ்தானில் சுமார் 25 கோடி பேர் தினக்கூலிகளாக உள்ளனர். எனவே பணக்காரர்கள் தேவையற்ற பதுக்கலில் ஈடுபடாமல் எளியமக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் கரோனா வைரஸால் 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |