Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் உயிரிழந்த பிரபல கன்னட நடிகர்… திரையுலகினர் சோகம்…!!!

பிரபல கன்னட நடிகர் மகாதேவப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார் .

கன்னட திரையுலகில் பிரபல நடிகர் மகாதேவப்பா சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . இவர் சங்கர் குரு, குரு பிரம்மா, ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணா ,கவிரத்னா காளிதாசா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் . மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

News18 Telugu - Shani Mahadevappa: ఇండస్ట్రీలో మరో విషాదం.. కరోనాతో సీనియర్  నటుడు కన్నుమూత.. | Kannada senior actor Shani Mahadevappa passed away due  to Corona at the age of 88 pk- Telugu News, Today's

இதையடுத்து நீண்ட காலமாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த மகாதேவப்பா கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் . இந்நிலையில் இவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . இவருக்கு திரையுலகினரும் , ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |