Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து கேரளாவில் டெங்கு, எலி காய்ச்சல்களும் பரவுகின்றன….!!!

கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் உடன் டெங்கு மற்றும் எலி காய்ச்சல்களும் பரவுவதாக அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், மாநிலத்தில் நேற்று புதிதாக 1417 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 1426 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணம் அடைந்ததாகவும், மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு நடுவே டெங்கு மற்றும் எலி காய்ச்சல்களும் பரவி வருவதாக குறிப்பிட்ட அவர், அவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இடுக்கி நிலச்சரிவில் சிக்கியவர்களில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டத்தை அடுத்து, பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளதாகவும், முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

Categories

Tech |