Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை எதிர்கொள்ள சிக்கன நடவடிக்கை..ஆயுத கொள்முதல் நிறுத்தி வைப்பு.. மத்திய அரசு முடிவு..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆயுத கொள்முதலை  நிறுத்தி வைக்க முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை சமாளிக்கவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்யவும் மத்திய அரசு அதிக அளவு செலவு செய்து வருகிறது. இதனால் சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்கும் படி முப்படைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக ராணுவ விவகாரங்களுக்கான அமைச்சகம், முப்படைகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பாதிப்பு உள்ளவரை ஆயுத கொள்முதல் நிறுத்தி வைக்கும் படி தெரிவித்துள்ளது. மத்திய அரசு பிரான்சில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவில் இருந்து S400 ஏவுகணைகள் வாங்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்து  பீரங்கிகள், ரைபிள் கன்கள் வாங்க இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவிலிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |