Categories
உலக செய்திகள் செய்திகள்

கொரோனா நோயாளியா? ”தூக்கி வாரிப்போடும் புது பிரச்னை” ஆய்வில் அதிர்ச்சி …!!

கொரோனா பதிக்கப்பட்டவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியடையவைக்கிறது.

சீனாவில் தொடங்கி கடந்த 5 மாத காலமாக ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த நோய்த்தொற்றுக்கு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் அனைவரும் சமூகவிலைகலை கடைபிடிக்கும் கட்டாயத்தில் ஊரடங்கில் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் ஊரடங்கு தனிமைப்படுத்தலால் மனநிலை பிரச்சனை ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு மனநிலை பிரச்சனை உண்டாகலாம் என ‘தி லான்செட் சைக்கியாட்ரி’ என்ற ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பிரச்சனை வழக்கமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஏற்படுவது என்றும், இது அவர்களின் உயிரைப் பறிக்கவும் மற்றும் குணமடைவதை தாமதப்படுத்தும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வு வெளியிட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்கள் மன அழுத்தம், பதட்டம் மன உளைச்சல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். இதேபோல் ஞாபக மறதி, பிரம்மை, மன குழப்பம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம் என இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கொரோனா நோயாளிகளை தனிமையில் வைப்பதுதான் இந்த மனநல பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே அவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வீடியோ மூலம் காணவும் பேசவும் செய்தால்  இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க அதிகம் வாய்ப்பு உள்ளது என இந்த ஆய்வு கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |