சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான மைக் ஹஸி தற்போது நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி ,பயோ பபுள் பாதுகாப்பு வளையத்திற்குள் நடைபெற்று வந்தது. ஆனால் 30வது லீக் போட்டியின் போது கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்களான மைக் ஹஸி ,பாலாஜி மற்றும் மற்ற அணியின் வீரர்களுக்கு அடுத்தடுத்து , பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான மைக் ஹஸி மற்றும் பாலாஜி இருவரும் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தனர் . தற்போது இந்திய விமானங்கள் ,ஆஸ்திரேலியா வருவதற்கு , மே 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சென்னை அணியின் பயிற்சியாளர் மைக் ஹஸி முழுமையாக குணமடைந்து, மாலத்தீவுக்கு செல்வார் என கருதப்பட்டது.
ஆனால் தற்போது மாலத்தீவில் , இந்தியாவில் இருந்து வருபவர்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. சென்னை அணி நிர்வாகத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் மைக் ஹஸிக்கு, நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இதுபற்றி பேசிய சென்னை அணியின் செயல் அதிகாரியான காசிவிஸ்வநாதன், பயிற்சியாளர் மைக் ஹஸி மற்ற வீரர்களுடன், மாலத்தீவில் இணைய முடியாது என்று கூறியுள்ளார். தற்போதுள்ள சூழலில் அவருடைய உடல்நிலை மட்டும் தான் முக்கியம் என்றும், அவரது பயணம் குறித்து இப்போது எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். பரிசோதனையின் போது அவரது நெகட்டிவ் முடிவு வந்தால் ,அவரை தாயகம் திருப்பி அனுப்புவதற்கான பணிகள் குறித்து திட்டமிடப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.