சிரிய அதிபர் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மாவிற்கும் கடந்த மார்ச் 8-ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் மூன்று வாரங்கள் கழித்து அவர்கள் இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெறிவித்துள்ளது. ஆகையால் கூடிய விரைவில் அவர்கள் இருவரும் மீண்டும் தனது பணிகளுக்கு திரும்புவார்கள் என்று கூறியுள்ளனர்.