கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தொற்றிலிருந்து குணமடைந்தார்.
பிரெஞ்சு கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் வன்னஸ் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த 2-ஆம் தேதி லியோனல் மெஸ்ஸி உட்பட பிஎஸ்ஜி கிளப் அணியில் 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லியோனல் மெஸ்ஸி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தொற்றிலிருந்து அவர் குணமடைந்துள்ளார்.அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தது. இதில் பிஎஸ்ஜி கிளப் அணிக்காக விளையாடி வரும் மெர்ஸி அடுத்த ஒரு சில நாட்களில் அணியுடன் இணைவார் என அந்த கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.