Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவில் இருந்து மீண்டார் சவுரவ் கங்குலி ….! மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ….!!!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான கங்குலி கடந்த 28-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவிலுள்ள  உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில்  லேசான அறிகுறிகளுடன் கங்குலிக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த  சவுரவ் கங்குலி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதேசமயம் தொற்றில் இருந்து குணம் அடைந்த போதும் அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |