கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நாளை நடைபெறவுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேச் சென்றது. குறிப்பாக கொரோனா வைரஸினால் பெரிதும் பாதிக்கப்பட்டும் அதிக உயிரிழப்புகளையும் சந்திந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நாளை நடைபெறவுள்ளது. இதற்காக வாஷிங்டன் நகரில் உள்ள நேஷனல் மால் மைதானத்தில் ஆறரை இலட்சத்திற்கும் அதிகமான வெள்ளைக் கொடிகள் நடப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.