Categories
சினிமா தமிழ் சினிமா

‘கொரோனாவிலிருந்து குணமடைந்து அண்ணா வீடு திரும்பிவிட்டார்’… நடிகர் கார்த்தி டுவீட்…!!!

நடிகர் சூர்யா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக  நடிகர் கார்த்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார் . இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்  ‘கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் . இன்னும் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் . பயத்தில் முடங்கி விட முடியாது . அதேநேரம் கவனமும், பாதுகாப்பும் அவசியம் . அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும் நன்றிகளும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சூர்யா தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது தம்பியும் நடிகருமான கார்த்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் சூர்யா இருப்பார் . அனைவரின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |