Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவிலிருந்து மீண்ட சூர்யா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி… வெளியான வீடியோ…!!!

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நடிகர் சூர்யா பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சைக்குப்பின் முற்றிலும் குணமடைந்து விட்டார். விரைவில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நடிகர் சூர்யா முதல் முறையாக பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அவருடன் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே அந்த பள்ளியை சுற்றிப் பார்க்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |