Categories
டென்னிஸ் விளையாட்டு

கொரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வருவேன்….டென்னிஸ் வீரர் ரபெல் நடால் நம்பிக்கை ….!!!

கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால் கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இந்நிலையில் போட்டி முடிந்து நாடு திரும்பிய அவருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இதனால் அவர் வீட்டில்  தனிமைப்படுத்தப் பட்டார்.

இதுகுறித்து ரஃபேல் நடால் தெரிவிக்கையில்,’ சில லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன. எனக்கு சில விரும்பத்தகாத தருணங்கள் உள்ளன .ஆனால் அவற்றிலிருந்து நான் விரைவில் மீண்டு வருவேன் என நம்புகிறேன். நான் இப்போது வீட்டிற்கு வந்துவிட்டேன் .என்னுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் எனக்கு கொரோனா தொற்று  உறுதியானதை தெரிவித்து விட்டேன்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |