Categories
உலக செய்திகள்

கொரானா வைரஸ் : காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்!’ அதிர்ச்சி தகவல் .!!

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது.

மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் குறித்து சர்வைவல் மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இந்த வைரஸ் பற்றி சில தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது  `காற்றில் மூன்று மணிநேரம், காப்பரில் நான்கு மணி நேரம், கார்ட்போர்டில் ஒரு நாள் முழுவதும், பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பொருள்களில் 72 மணி நேரம்’ வரை உயிருடன் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |