Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. சுகாதாரத்துறை

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அதாவது 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு இன்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 1,487, செங்கல்பட்டில் 126, திருவள்ளூரில் 120, காஞ்சிபுரத்தில் 56, மதுரையில் 157, திருவண்ணாமலையில் 139, ராமநாதபுரத்தில் 18, அரியலூரில் 12, கோவையில் 12, கடலூரில் 63, தர்மபுரியில் 2, திண்டுக்கல்லில் 7, ஈரோட்டில் 2, கள்ளக்குறிச்சியில் 14, கன்னியாகுமரியில் 10, கரூரில் 4, கிருஷ்ணகிரியில் 9, நாகையில் 17,

நாமக்கல்லில் 1, நீலகிரியில் 2, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 16, ராணிப்பேட்டையில் 52, சேலத்தில் 24, சிவகங்கையில் 33, தென்காசியில் 20, தஞ்சாவூரில் 36, தேனியில் 36, திருப்பத்தூரில் 26, திருவாரூரில் 13, தூத்துக்குடியில் 62, நெல்லையில் 5, திருப்பூரில் 2, திருச்சியில் 51, வேலூர் 13, விழுப்புரம் 41, விருதுநகர் 5 என அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்று வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் டெல்லியில் 10, ஜம்மு காஷ்மீரில் 2, கர்நாடகாவில் 11, கேரளாவில் 9, மஹாராஷ்டிராவில் 9, குஜராத் 4, ஆந்திரா 3, ராஜஸ்தான் 2, தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலகங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், கத்தாரில் 1, நைஜிரியாவில் 2, சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |