Categories
உலக செய்திகள்

கொரோனாவை அழிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து – ஆஸி. பல்கலை அசத்தல் …!!

உலகம் முழுவதும் இருந்து கிடைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து கொரோனாவை அழிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்சுக்கு மருந்து கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடும் முயற்சித்து வருகின்றன. இதில் தற்போது பலன் கிடைத்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடந்த ஆய்வு அமைந்துள்ளது. மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள இந்த பல்கலை ஆய்வில் ஐவர்மெக்டின் என்ற மருந்தின் ஒரு டோஸ் உயிரணு கலாசாரத்தில் வளரும் சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மோனாஷ் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் கெய்லி வாக்ஸ்டாப் கூறும் போது, ஐவர்மெக்டின் ஒரு டோஸ் எல்லா வைரஸின் மரபணு பொருட்களை முழுமையாக 48 மணிநேரத்திற்குள் அகற்ற முடியும். 24 மணி நேரத்தில் அதில் குறிப்பிடத்தக்க அளவு குறைவதை நாங்கள் உறுதி படுத்தியுள்ளோம். இந்த மருந்து எப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் ஐவர்மெக்டின் மருந்து வைரஸை அழிப்பதற்காக உயிரணு திறனைக் குறைக்கின்றது.

நாங்கள் உலகளவில் ஏற்பட்ட தொற்றுநோயை எதிர் கொண்டுள்ளோம். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை கிடையாது. இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஏற்கனவே கிடைத்த ஒரு மருந்து கலவை எங்களுக்கு கிடைத்தால் அது மக்களுக்கு உதவும். தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக கிடைப்பதற்கு முன்பு இந்த மருந்து உதவியாக இருக்கும்  என நம்புகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மருந்தை எந்த அளவுக்கு மனிதர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சரியான அளவை கண்டுபிடிக்க ஆராயப்பட்டு வருகின்றது. ஐவர்மெக்டின் மருந்து என்பது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும். இந்த மருந்து எச்.ஐ.வி தொற்று, டெங்கு மற்றும் இன்ப்ளூயன்ஸா உள்ளிட்ட வைரஸ்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |