கொரோனா வைரஸ் நோயினால் உலகம் முழுவதும் 1354 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பை உண்டாக்கும். இந்த வைரசால் சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வைரஸ் சீனாவிலிருந்து அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகளுக்கு பரவியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை ஐரோப்பிய நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இல்லை என்ற நிலையில், இப்பொழுது பிரான்சில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும் சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, வியட்நாம், நேபாளம், ஹாங்காங், மாகூகு, மலேசியா போன்ற நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோயினால் 1354 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.