Categories
உலக செய்திகள்

நமது காலணிகளில் 3 முதல் 5 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர் வாழுமாம்: அதிர்ச்சி தகவல்..!

கொரோனா வைரஸ் பரவ காலணிகள் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியதுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களின் காலனிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு நடந்து செல்லும் போது, மிக எளிமையாக நோய் தோற்று பரவக்கூடும். அதாவது கொரோனா வைரஸ், ஒருவருடைய காலணிகளில் 3 முதல் 5 நாட்கள் உயிர்வாழும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு அரிசோனா பல்கலைக்கழக பேராசிரியரும், நுண்ணுயிரியலாளருமா சார்லஸ் கர்பா ஒரு காலணியில் 4 லட்சத்து 21 ஆயிரம் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் உயிர் வாழும் என கண்டறிந்துள்ளார். மேலும் வீட்டிற்குள் ஒரு ஜோடி காலணிகளையும் வெளியில் செல்ல மற்றொரு ஜோடி காலணிகளையும் பயன்படுத்துவது நல்லது என வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளனர். காலணிகளுக்கு பதில் காலுறைகளை பயன்படுத்தலாம் என்றும், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட காலுறைகளை கைவிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Categories

Tech |