சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 279 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3330 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சென்னை மாநகரில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு கருஞ்சிவப்பு மண்டலமாக கோடம்பாக்கம் மாறியுள்ளது. கோடம்பாக்கம் பகுதியில் 22 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் மாநகராட்சியினர் நேற்று முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.