Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் முதன்முறையாக இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் முதன்முறையாக இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – 3, காஞ்சிபுரம் – 2, தஞ்சாவூர் – 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், நாகை, விழுப்புரத்தில் தலா ஒருவரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |