Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா – பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து 1,477 ஆக அதிகரித்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் இன்று  46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365ல் இருந்து 411 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் உயிரிழப்புகள் இல்லை என்றும் சுகாதாரத்துறை இன்று மாலை தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர் மருத்துவர்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவர் சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார். சென்னையில் மருத்துவர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இந்த  செய்தி என்பது வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

Categories

Tech |