இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனோவால் பாதிப்பக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 46.64% குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இறப்பு விகிதம் 1.2 சதவிகிதமாக தான் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், சிகிச்சை முறைகளும் சிறப்பாக உள்ளது என மத்திய குழுவினர் பாராட்டி உள்ளனர் என தகவல் அளித்துள்ளார்.
மேலும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிறைந்ததாக வந்த செய்தி தவறானது என குறிப்பிட்ட அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சென்னையில் 4 மருத்துவமனைகளில் போதிய இடம் உள்ளது. மொத்தமுள்ள படுக்கை வசதிகளில் 55 சதவிகிதம் பேர் மட்டுமே இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் உத்தரவுப்படி அனைத்து மருந்துகள் மற்றும் கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தேவையான அளவு உள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.