Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்வு – 4,534 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67,692ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,534ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 86,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 56,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,897 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 18,845 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 15,257 ஆக உள்ளது. குஜராத் மாநிலத்தில் 15,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் – 7,703, மத்திய பிரததேசம் – 7,621, உத்தரபிரதேசத்தில் – 6,991, மேற்கு வங்கம் – 4,192, ஆந்திரா – 3,171, பஞ்சாப் – 2,139, பீகார் – 3,061, கர்நாடகாவில் 2,418 பேரும், தெலுங்கானா – 2,098, ஜம்மு காஷ்மீர் – 1,921, ஹரியானா – 1,381, கேரளா – 1,004 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்னர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை 4ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

Categories

Tech |