Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 606 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23ஆக உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது.

195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குஇந்தியா, கொரோனா வைரஸ், உயிரிழப்பு, நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

உலகளவில் கொரோனா வைரசால் உலகளவில் 19, 100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4,28,193 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் 1,09,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 443 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 3, 434 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 42 பேர் குணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |