Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258ஆக உயா்வு – 4 பேர் உயிரிழப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு இந்தியர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை 23  பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52 பேரும், கேரளத்தில் 40 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநில வாரிய கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரவங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில்,

கேரளா – 33 (வெளிநாட்டினர் – 7 ), மகாராஷ்டிரா- 49 (வெளிநாட்டினர் – 3), உ.பி.-23 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 25 (வெளிநாட்டினர் – 1), கர்நாடகா – 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் – 13, ராஜஸ்தான் – 15 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 8 (வெளிநாட்டினர் – 11), தமிழ்நாடு – 3, ஜம்மு & காஷ்மீர் – 4, பஞ்சாப் -2, ஹரியானா – 3, (வெளிநாட்டினர் -14), ஆந்திரா – 3, ஒடிஷா – 2, உத்தரகண்ட் – 3, பெங்கால் – 2, பாண்டிச்சேரி – 1, சண்டிகர் – 1, சத்தீஸ்கர் – 1, குஜராத் – 7, ஹிமாச்சல பிரதேஷ் – 1, மத்திய பிரதேஷ் – 4 என மொத்தம் 258பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் தமிழகத்தில் கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமா் மோடி அறிவித்துள்ளார். அதில் நாளை பொதுமக்கள் சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அடுத்த 3 முதல் 4 வாரங்கள் முக்கியமானவை என நேற்று மாலை மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் நடத்திய கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |