Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்வு – சுமார் 206 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 69 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸால் இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலியானவர்கள் எண்ணிக்கையானது 5ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை.

இதனையடுத்து அந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பலவேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு தயார்ப்படுத்தப்படுள்ளது. தன்னார்வ நிறுவனங்கள் தங்களால் இயன்றவகையில் வீடுகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே நேற்று மாலை மக்களிடையே உரையாற்றிய  வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |