Categories
உலக செய்திகள்

கொரானா வைரஸ்: மலேசியாவில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது!

கோவிட்-19 காரணமாக பலி எண்ணிக்கை 8 ஆக  இருந்த நிலையில் மலேசியாவில் மேலும் ஒருவர்  இறந்துள்ளார். 

இதுவரை மலேசியாவில்  கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை 9 ஆக உயர்ந்துள்ளது” என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம்  தெரிவித்துள்ளார்.

49 வயதான அவர்  மருத்துவர் ஆவார். அவர் அண்மையில் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்  என்று  கூறப்படுகிறது. இன்றுவரை, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மொத்தம் 153 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 1,183 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |