Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம்: தொடர் கண்காணிப்பில் 78 பேர்

சீனாவிலிருந்து தமிழ்நாடு வந்த 78 பேரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சீனாவிலிருந்து வந்த 78 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுசுகாதரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது, “கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனோ வைரஸ் கைகளின் மூலமாகாவும், இருமல் அல்லது தும்மல் மூலமாகவும் பரவுகிறது.

எனவே, கைகளை தினமும் 15 முறையாவது சுத்தம் செய்ய வேண்டும், கை வைக்கக் கூடிய இடங்களை சுத்தமாக வைக்க வேண்டும். தும்மள் வரும்போது மூக்கை கை குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். முதியவர்களும் ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தைகளையும் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும் சிறப்பு மருத்துவ பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும், சீனாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 78 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 10 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் சீனாவிலிருந்து வந்த 68 பேர் தனியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் 28 நாள்களுக்கு வீடுகளில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள். கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Categories

Tech |