கொரோனா வைரஸ் எதிரொலியால் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை பொறுத்த வரை டெல்லி , கர்நாடகம் , மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களில் தலா ஒருவர் வீதம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை , பிற நாடுகளுடனான போக்குவரத்து சேவை இரத்து , விசா மறுப்பு என பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
திட்டமிட்ட பொதுத்தேர்வுகள் ( 10,11,12) நடத்தப்பட்டு என்று பல்வேறு மாநில அரசுக்கள் பொதுத்தேர்வு இல்லாத வகுப்புகளுக்கு ( 8ஆம் வகுப்பு வரை ) மட்டும் விடுமுறை அறிவித்திருந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் , பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE மெயின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது..