Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,461 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் குடிசை பகுதிகளை கண்டறிந்து நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது, சென்னை மக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சர்க்கரை போன்ற நோயுற்ற வயதானவர்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 0.07% ஆக உள்ள இறப்பு விகித்ததை குறைக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு என்பது அவசியம் தேவைப்படுகிறது. புதிய கோணங்களில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |