Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.76 லட்சத்தை தாண்டியது…. சிகிச்சையில் 1.33 லட்சம் பேர் உள்ளனர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,985 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 279 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது.

உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 6ம் இடத்தில் உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,583 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 90,787 பேரும், தமிழகத்தில் 34,914 பேரும், டெல்லியில் 31,309 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து , குஜராத்தில் 21,014 பேரும், ராஜஸ்தானில் 11,245 பேரும், உத்தரபிரதேசத்தில் 11,335 பேரும், மத்திய பிரதேசத்தில் 9,849 பேரும், மேற்குவங்கத்தில் 8,985 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,745 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,289 பேரும், குஜராத்தில் 1,313 பேரும், மேற்குவங்கம் 415 பேரும், மத்திய பிரதேசத்தில் 420 பேரும், டெல்லியில் 905 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

அதேபோல உத்திரபிரதேசத்தில் 301 பேரும், தமிழகத்தில் 307 பேரும், ராஜஸ்தானில் 255 பேரும் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35,206 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,33,632 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |