Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரிப்பு – மாநில வாரியாக முழு விவரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85 அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 68 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர்.

கேரளா – 17, மகாராஷ்டிரா-19, உ.பி.-10 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 6, கர்நாடகா – 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் -3, ராஜஸ்தான் -1 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 1, தமிழ்நாடு -1, ஜம்மு & காஷ்மீர் – 1, பஞ்சாப் -1, ஹரியானா – (வெளிநாட்டினர் -14), ஆந்திரா – 4 என மொத்தம் 85 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்ததால் 85 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று 4,900 ஆக இருந்த நிலையில் இன்று 5,000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. டெல்லி, கேரளா, கர்நாடகா, தமிழக மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |