Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 2,07,615ஆக உயர்வு… 5,815 பேர் பலி!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,706ல் இருந்து 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 217 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 4,775 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,303ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,01,497 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 72,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 31,333 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,465 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 24,586 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 22,132 ஆக உள்ளது. குஜராத் மாநிலத்தில் 17,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் – 9,373, பீகார் – 4,155, ஆந்திரா – 3,898, கர்நாடகாவில் 3,796 பேரும், தெலுங்கானா – 2,891, ஹரியானா – 2,652, கேரளா – 1,412 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை 5ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |