Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று… ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பாதிப்பு..!

சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில், டெக்கனிக்கல் பிரிவில் பணிபுரிந்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான 9 பேரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக சென்னை மாநகரம் திகழ்கிறது. நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |