தமிழகம் முழுவதும் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 1,380, செங்கல்பட்டில் 146, கோவையில் 12, கடலூரில் 29, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 44, ஈரோட்டில் 5, கள்ளக்குறிச்சியில் 43, காஞ்சிபுரத்தில் 59, கன்னியாகுமரியில் 9, கரூரில் 3, கிருஷ்ணகிரியில் 3, மதுரையில் 137, நாகப்பட்டினத்தில் 2, நாமக்கல்லில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், நீலகிரியில் 17, பெரம்பலூரில் 12, புதுக்கோட்டையில் 2, ராமநாதபுரத்தில் 22, ராணிப்பேட்டையில் 29, சேலத்தில் 7, சிவகங்கையில் 20, தென்காசியில் 11, தஞ்சாவூரில் 14, தேனியில் 48, திருப்பத்தூரில் 1, திருவள்ளூரில் 156, திருவண்ணாமலையில் 114, திருவாரூரில் 10, தூத்துக்குடியில் 38, நெல்லையில் 5, திருச்சியில் 41, வேலூரில் 36, விழுப்புரத்தில் 9, விருதுநகரில் 26 என இன்று மொத்தம் 35 மாவட்டங்களில் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும், இன்று பிற மாநிலங்களில் இருந்து வந்த 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதில் கர்நாடகாவில் இருந்து வந்த 10 பேர், கேரளாவில் இருந்து 5 பேர், மகாராஷ்டிராவில் இருந்து 4, தெலங்கானாவில் இருந்து 3, மேற்குவங்கம் மற்றும் டெல்லியில் இருந்து வந்த தலா 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ரஷ்யாவில் இருந்து வந்த தலா 4 பேர், காங்கோ மற்றும் மாலத்தீவில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது.