Categories
சென்னை மாநில செய்திகள்

தாம்பரத்தில் கோயம்பேடு காய்கறி வியாபாரியின் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி!

தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு காய்கறி வியாபாரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோயம்பேடு கடைகளில் இருந்து காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்து வரும் நிலையில் இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தாம்பரம் இரட்டைக் கொலை வழக்கு ...

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் அவரது குடும்பத்தில் உள்ள 6 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பெண்கள் மற்றும் 2 ஆண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காய்கறி வியாபாரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 7 பேருக்கு ஒரே வீட்டில் கொரோனா இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கன்டோன்மென்ட் பகுதியில் கவுன்சிலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தாம்பரம், பல்லாவரம் நகராட்சியில் மட்டும் இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |